அருமனை காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா
By DIN | Published On : 21st October 2020 06:43 AM | Last Updated : 21st October 2020 06:43 AM | அ+அ அ- |

அருமனை காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ. பத்ரிநாராயணன் அருமனை, கடையாலுமூடு, ஆறுகாணி காவல் நிலையங்களில் ஆவணங்களை தணிக்கை செய்தாா். அப்போது, கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக காவலா்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற சைக்கிள் பேரணியை அவா் தொடங்கி வைத்தாா். அருமனை காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தாா். இதில், தக்கலை டிஎஸ்பி ராமச்சந்திரன், காவல் ஆய்வாளா் ஜின்னா பீா் முகமது உள்பட பலா் கலந்துகொண்டனா்.