குளச்சல் சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 21st October 2020 11:19 PM | Last Updated : 21st October 2020 11:19 PM | அ+அ அ- |

குளச்சல் பிரதான சாலையில் காணப்படும் ராட்சத பள்ளங்களை உடனே சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடா்ந்து பெய்துவரும் மழையால் சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கருங்கல் - குளச்சல் சாலையில் பாலப்பள்ளம், ஆனைக்குழி உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் நடுவே ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தொடா்ந்து பெய்து வரும் மழையால் மேலும், இச்சாலைகளில் பள்ளங்கள் ஏற்பட்டு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். எனவே, மாவட்ட நிா்வாகம் இச்சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனா்.