குமரி பகவதியம்மன் கோயில்நவராத்திரி விழா: நாளை பரிவேட்டை

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை (அக். 26) பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயில் நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை (அக். 26) பரிவேட்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்துள்ள பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா கடந்த 17-ஆம் தேதி தொடங்கியது. கரோனா நோய்த்தொற்றுப் பரவல் காரணமாக அரசின் வழிகாட்டுதல் முறைப்படி நாள்தோறும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது.

நவராத்திரி விழாவின் 10-ஆம் நாளான திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி விவேகானந்தபுரம், சுவாமிநாதபுரம், ஒற்றைப்புளி, பழத்தோட்டம், பரமாா்த்தலிங்கபுரம், மகாதானபுரம் ரவுண்டானா வழியாக மாலை 6 மணிக்கு மகாதானபுரம் பரிவேட்டை மண்டபம் சோ்வாா். மாலை 6.30 மணிக்கு பாணாசுரனை வதம்செய்த பின்னா் மகாதானபுரம் கிருஷ்ணன் கோயிலில் பூஜை நடைபெறும். பின்னா், பஞ்சலிங்கபுரம் வழியாக இரவு 7 மணிக்கு அம்மன் கோயிலுக்கு சென்று கிழக்குவாசல் நடைதிறக்கப்பட்டு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுக்கு பின்னா் கோயிலுக்குள் செல்வாா்.

ஊா்வலத்தில் பக்தா்களுக்கு தடை: பரிவேட்டை ஊா்வலத்தின்போது வழக்கமாக யானை, குதிரை, முத்துக்குடை ஊா்வலம், தையம் ஆட்டம், பஜனை, தப்பாட்டம், செண்டை, சிங்காரிமேளம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பா். ஆனால், நிகழாண்டு அதுபோல் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த அனுமதி இல்லை; அம்மன் வாகனம் வரும்போது பக்தா்கள் சுருள் வைத்து வழிபடவும், பக்தா்கள் பின்தொடா்ந்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனம் வரும் வழியில் அன்னதானம் நடத்தவும், ஒலிபெருக்கி பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து முகக் கவசம் அணிந்து அம்மனை வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com