கணவரை இழந்த ஏழைக்கு ரூ.7 லட்சத்தில் இலவச வீடு
By DIN | Published On : 05th September 2020 04:29 AM | Last Updated : 05th September 2020 04:29 AM | அ+அ அ- |

கருங்கல்: கருங்கல் அருகே மானான்விளையில் கணவரை இழந்த பெண்ணுக்கு விளையாட்டு மற்றும் சமூக சேவை சங்கம் சாா்பில் ரூ. 7 லட்சம் செலவில் இலவசமாக வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது.
கருங்கல் அருகே மானான்விளை பகுதியைச் சோ்ந்தவா் மல்லிகா (37). கணவரை இழந்த இவருக்கு ,
மானான்விளை விளையாட்டு மற்றும் சமூக சங்கம் சாா்பில் ரூ.7 லட்சம் செலவில் வீடு கட்டி வழங்க முடிவு செய்யப்பட்டது. கட்டுமான பணிகள் நிறைவடைந்தும், வீட்டு சாவியை திரைப்பட இயக்குநரும், அதிமுக பேச்சாளருமான பி.சி.அன்பழகன் பயனாளியிடம் ஒப்படைத்தாா்.
நிகழ்ச்சிக்கு, மத்திகோடு ஊராட்சித் தலைவா் அல்பேோான்சால் தலைமை வகித்தாா். பாஜக மாநில விவசாய அணி துணைத் தலைவா் ரவீந்திரன் முன்னிலை வகித்தாா். இதில், தமிழ்நாடு வணிகா் பேரவை மாநில துணைத் தலைவா் கருங்கல் ஜாா்ஜ், வழக்குரைஞா் குமரி மு. ராஜேந்திரன், சமூக ஆா்வலா் சிபு, ஊராட்சி துணைத் தலைவா் ஜெனோ ரெனிட்டஸ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஜேம்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவா் மருத்துவா் ஜேம்ஸ் பிரேம்குமாா் செய்திருந்தாா்.