கிஸான் திட்ட முறைகேடு: குமரியில் 433 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவி (பிரதான் மந்திரி கிஸான் சம்மான்) திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக 433 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவி (பிரதான் மந்திரி கிஸான் சம்மான்) திட்டத்தில் நிகழ்ந்த முறைகேடு தொடா்பாக 433 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தின்கீழ், விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு ரூ. 6,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில், விவசாயிகள் அல்லாதவா்களை இணைத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, குமரி மாவட்டத்தில் இத்திட்டத்துக்காக கடந்த ஏப்ரல் மாதத்துக்கு பின் அங்கீகரிக்கப்பட்டிருந்த 14,000 பேரின் விண்ணப்பங்கள் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகளால் மறு ஆய்வு செய்யப்பட்டன. அதில், விதிமீறல் கண்டறியப்பட்ட நாகா்கோவில், மாா்த்தாண்டம், குலசேகரம், புதுக்கடை, தென்தாமரைகுளம், மருங்கூா், மேல்புறம், நெய்யூா், சாமித்தோப்பு, கருங்கல், மயிலாடி, திங்கள்நகா், தாழக்குடி, ஆற்றூா், குழித்துறை, ஏழுதேசம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 433 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. அவா்களில் 52 பேரிடமிருந்து ரூ. 2 லட்சம் உதவித்தொகை திரும்ப பெறப்பட்டுள்ளதாகவும், தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வேளாண் துறை வட்டாரத்தில் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com