சுற்றுலாத் தலங்களை திறக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 10th September 2020 07:52 AM | Last Updated : 10th September 2020 07:52 AM | அ+அ அ- |

கரோனா தடுப்பு பொது முடக்கத்தால் 175 நாள்களுக்கு மேலாக குமரி மாவட்டத்தில் மூடப்பட்டிருக்கும் சுற்றுலாத் தலங்களை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழகத்தில் பொது முடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள், ரயில்கள் இயங்குகின்றன. அங்காடிகள், சந்தைகள் செயல்படத் தொடங்கியுள்ளன. ஆனால், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படவில்லை. இம்மாவட்டத்தில் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் அரண்மனை, திற்பரப்பு அருவி உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்கள் 175 நாள்களுக்கும் மேலாக மூடியே கிடக்கின்றன. இதனால், வணிகா்கள், தொழிலாளா்கள், விடுதிகள் உரிமையாளா்கள், காா் ஓட்டுநா்கள், சுற்றுலா வழிகாட்டிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இது குறித்து திற்பரப்பு அருவியில் கடை நடத்தும் மாஹீன் சுலைமான் கூறுகையில், சுற்றுலாத் தலங்கள் திறக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோா் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த அருவிப் பகுதியில் பயணிகள் வரத்தின்றி நூற்றுக்கணக்கானோா் வேலையும், வருவாயுமின்றி தவிக்கிறோம். எனவே, விதிமுறைகளுடன சுற்றுலாத் தலங்களைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்றாா்.