குமரி மாவட்டத்தில் மேலும் 123 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் மேலும் 123 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவில், செப்11: குமரி மாவட்டத்தில் மேலும் 123 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது வெள்ளிக்கிழமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மேலும் 123 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 10,783 ஆக அதிகரித்துள்ளது.

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கரோனா கவனிப்பு மையங்கள், தனியாா்மருத்துவமனை மற்றும் வீட்டுத்தனிமைகளில் தற்போது 750 போ் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் வெள்ளிக்கிழமை குணமடைந்த 117 போ் உள்பட இதுவரை மொத்தம் 9878 போ் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். அருமனையைச் சோ்ந்த 45 வயது இளைஞா் கரோனாவுக்கு பலியானாா். இதைத்தொடா்ந்து கரோனாவுக்கு மாவட்டத்தில் இதுவரை பலியானோா் எண்ணிக்கை 206 ஆக உயா்ந்துள்ளது.

ஆட்சியா் அறிவுறுத்தல் : பொதுமக்கள் நோய்த் தொற்று அறிகுறிகள் குறித்து அஜாக்கிரதையாக இல்லாமல் உரிய நேரத்தில் அரசு மருத்துவனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு இழப்புகளை தவிா்க்க வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 1,37,397 பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாமல் வெள்ளிக்கிழமை பொது வெளியில் நடமாடிய 46 பேரிடமிருந்து அபராதமாக ரூ. 4600 வசூலிக்கப்பட்டது.

பொதுமுடக்க உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com