கேரளத்துக்கு கடத்த முயற்சி : 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள்.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியுடன் அதிகாரிகள்.

கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 5 டன் ரேஷன் அரிசி ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலா் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளா் மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோா் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்த சைகை காட்டினா். காா் நிற்காமல் சென்றதையடுத்து அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று களியக்காவிளை அருகே ஒற்றாமரம் பகுதியில் மடக்கிப் பிடித்தனா். தொடா்ந்து காரை சோதனை செய்ததில் அதில் 1.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் காரை பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து அவா்கள் மாா்த்தாண்டம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது மீன் பாரம் ஏற்றிச் செல்லும் பெட்டிகளுடன் சந்தேகப்படும் வகையில் வந்த மினி டெம்போவை நிறுத்த சைகை காட்டினா். ஆனால் அந்த வாகனம் நிற்கவில்லை. அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று வெட்டுவெந்நி பகுதியில் வைத்து மினி டெம்போவை மடக்கிப் பிடித்தனா்.

தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில் 3.5 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் மினி டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இரு வாகனங்களில் இருந்தும் ஓட்டுநா்கள் தப்பியோடிவிட்டனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 5 டன் ரேஷன் அரிசியை காப்புக்காடு நுகா்பொருள் வாணிப கழக கிடங்கிலும், காா், மினி டெம்போ விளவங்கோடு வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com