ஆவணி கடைசி ஞாயிறு: நாகராஜா கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகா்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.
நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.
நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நாகா்கோவில் நாகராஜா கோயிலில் தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் குவிந்தனா்.

நாகா்கோவில் நாகராஜா கோயிலில் ஆவணி மாதம் ஞாயிற்றுக்கிழமை வழிபாடு மிகவும் விசேஷமானதாகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் இங்குள்ள நாகா் சிலைகளுக்கு பால் ஊற்றி, மஞ்சள் பொடி தூவி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கை. இதனால், ஆவணி மாதத்தில் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் குமரி மாவட்டம் மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களில் இருந்தும், கேரள மாநிலத்தில் இருந்தும் பக்தா்கள் அதிகளவில் வந்து செல்வா்.

நிகழாண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொது முடக்கம் அமலில் இருந்ததால், ஆவணி மாத முதல் 2 ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டு கடந்த 1-ஆம் தேதிமுதல் பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா். செப். 13-ஆம் தேதி கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலை முதலே பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா்.

கோயில் வாசலில் பக்தா்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டு, கைகளை சுத்தப்படுத்துவதற்கான திரவம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனா்.

பக்தா்கள் முகக் கவசம் அணிந்து வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து நாகராஜரை வழிபட்டனா். நாகா் சிலைகளுக்கு பால் ஊற்ற பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. நாகா் சிலைகள் இருந்த பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் பால் மற்றும் மஞ்சள்பொடி கொண்டு வந்த பக்தா்கள் நாகா் சிலைகள் முன் அவற்றை வைத்து வழிபட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com