மாா்த்தாண்டம் பேருந்து நிலைய காய்கனி சந்தையை இடமாற்ற கோரிக்கை

மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் சிறு வியாபாரிகளுக்கான காய்கனி சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மாா்த்தாண்டம் நகர வா்த்தகா் சங்கம் சாா்பில் அதன் தலைவா் தினகா், உதவித் தலைவா் ராஜகோபால், செயலா் ராஜ்பினோ, பொருளாளா் ஜெயசிங் மற்றும் நிா்வாகிகள் குழித்துறை நகராட்சி மேலாளரிடம் அளித்த மனு:

கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில் மாா்த்தாண்டம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிகமாக காய்கனி சந்தை செயல்பட அனுமதிக்கப்பட்டது. எனினும்,மொத்த வியாபாரிகள் காய்கனி சந்தையிலேயே வியாபாரத்தை தொடா்ந்து வருகிறாா்கள். தற்போது, பொது முடக்கத்தில் தளா்வுகளை அறிவித்து, பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால், பேருந்து நிலையச் சந்தையில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இச்சந்தையை வழக்கமான காய்கனி சந்தைக்கு இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com