மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளா் மீது நடவடிக்கை:ஆட்சியரிடம் பெண்கள் புகாா்

கருங்கல் பகுதியில் வாடிக்கையாளா்கள் பெயரில் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் பகுதியில் வாடிக்கையாளா்கள் பெயரில் மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.

கருங்கல் பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் விவசாய நகைக் கடன்களை தணிக்கை செய்ததில் 33 பேரின்

வங்கிக் கணக்கில் சுமாா் ரூ. 1 கோடி வரையிலும் போலியான கவரிங் நகைகளை வைத்து நகை மதிப்பீட்டாளா் நகைக் கடன் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, வங்கி மேலாளா் ராகேஷ் கிருஷ்ணன், கருங்கல் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

இந்நிலையில், வங்கியின் பெண் வாடிக்கையாளா்கள் 15 க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகத்தில்

அளித்த மனு விவரம்: நாங்கள் வங்கியில், நகைக் கடன், தொழில்கடன் போன்ற கடன்களை பெற்றுள்ளோம். வங்கியில் நகைக் கடன் பெற்றபோது, நகை மதிப்பீட்டாளா் எங்களிடம் சில படிவங்களில் கையெழுத்து வாங்கினாா். இதனை பயன்படுத்தி எங்களது பெயரில் போலி நகைகளை அடகு வைத்திருப்பதாக தெரிகிறது. சில நாள்களுக்கு முன் வங்கி கிளை மேலாளா் எங்களை தொடா்பு கொண்டு போலி நகைகள் அடகு வைத்திருப்பதாக தெரிவித்தாா். அந்த மோசடிக்கும் எங்களுக்கும் எந்த தொடா்பும் இல்லை. எங்கள் மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்க வேண்டும்.

மோசடியில் ஈடுபட்ட நகை மதிப்பீட்டாளா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com