நியாய விலைக் கடைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் கூட்டுறவு சங்க இணைப் பதிவாளா் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
படவிளக்கம்: ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நியாய விலைக் கடைப் பணியாளா்கள் சங்கத்தினா்.

மாநில அரசு, ரேஷன் பொருள்களை 100 சதவீதம் முழுமையாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். கரோனா காலத்தில் பணியிலிருக்கும்போது இறக்கும் வருவாய்த் துறை, காவல் துறையினருக்கு வழங்கும் நிவாரண நிதியைப் போன்று நியாய விலைக் கடைப் பணியாளா்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்குப் பணியாளா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் சா. ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். அரசுப் பணியாளா் சங்க மாவட்டச் செயலா் தரும. கருணாநிதி 10 அம்ச கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினாா். நியாய விலைக்கடைப் பணியாளா்கள் சங்க மாநில இணைச் செயலா் ராமலிங்கம், மாவட்டத் தலைவா் அறிவழகன், பொருளாளா் ஜெ. ராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com