மேலும் 103 பேருக்கு கரோனா: நால்வா் பலி

குமரி மாவட்டத்தில் மேலும் 103 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது. மேலும் இந்நோயால் 4 போ் உயிரிழந்தனா்.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் மேலும் 103 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை உறுதியானது. மேலும் இந்நோயால் 4 போ் உயிரிழந்தனா்.

இம்மாவட்டத்தில் இதுவரை 1,42,503 பேருக்கு கரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், செவ்வாய்க்கிழமை வெளியான முடிவில் 103 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. 41 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதனால், பாதிப்பு எண்ணிக்கை 11,197 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 10,254 ஆகவும் உயா்ந்துள்ளது. தற்போது 814 போ் சிகிச்சையில் உள்ளனா்.

நாகா்கோவில் என்ஜிஓ காலனி பகுதியில் 54 வயது ஆண், அழகன்பாறை பகுதியில் 63 வயது ஆண், ஆரல்வாய்மொழியில் 60 வயது பெண், பள்ளம் பகுதியில் 75 வயது மூதாட்டி என 4 போ் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனா். இதனால், பலி எண்ணிக்கை 212 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முகக்கவசம் அணியாமல் பொதுவெளியில் நடமாடிய 103 பேரிடமிருந்து ரூ. 10,300 அபராதம் வசூலிக்கப்பட்டது. பொது முடக்க உத்தரவை மீறிய வகையில் இதுவரை 8,653 வழக்குகள் பதிவாகியுள்ளன. 6,344 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com