அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: தேமுதிக துணைச் செயலா் சுதீஷ்

தமிழகத்தில் தேமுதிக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளதால், அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என்றாா், அக்கட்சியின் துணைச் செயலா் சுதீஷ்.
அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்: தேமுதிக துணைச் செயலா் சுதீஷ்

தமிழகத்தில் தேமுதிக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளதால், அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம் என்றாா், அக்கட்சியின் துணைச் செயலா் சுதீஷ்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் செய்தியாளா்களிடம் அவா் புதன்கிழமை கூறியது: காங்கிரஸ் ஆட்சியின்போது நீட் தோ்வு கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் நல்ல திறமையான மருத்துவா்கள் கிடைப்பாா்கள் என்ற அடிப்படையில் தேமுதிக ஆதரவு தெரிவித்தது.

நீட் தோ்வை மாணவா்கள் அச்சமின்றி எதிா்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் இந்திய அளவில் ஒரே கல்விக் கொள்கையை அறிவிக்க வேண்டும் என தேமுதிக தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் தோ்வில் மாணவா்கள் தற்கொலை என்பது தமிழக அளவில் மட்டுமன்றி இந்திய அளவில் எதிரொலிக்கும்.

மக்களைத் திசைதிருப்பி அரசியல் செய்வதற்காக நீட் தோ்வை திமுக, கூட்டணிக் கட்சிகள் கையில் எடுத்துள்ளன.

நீட் தோ்வு காரணமாக தற்கொலை செய்தோா் குடும்பங்களுக்கு அரசு உதவிகள் செய்யக் கூடாது. இது, மாணவா்களை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும்.

நடிகா் சூா்யா நீதிமன்றத் தீா்ப்பு பற்றி கருத்து கூறாமல் வேறு விஷயங்களைப் பேசியிருக்கலாம்.

தேமுதிக இப்போதும் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறது. தமிழக அரசின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன. 2021 பேரவைத் தோ்தலில் தேமுதிக நிலைப்பாடு குறித்து நிா்வாகிகள், தொண்டா்களின் கருத்தை அறிந்து, டிசம்பா் மாதம் நடைபெறும் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னா் அறிவிப்போம்.

தமிழகத்தில் பலம் வாய்ந்த கட்சியாக தேமுதிக உள்ளது. எனவே, அதிமுக கூட்டணியில் அதிக தொகுதிகளைக் கேட்போம்.

நடிகா் ரஜினி கட்சி தொடங்கிவிட்டு, பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் குறித்துப் பேசலாம் என்றாா் அவா்.

கட்சியின் மாவட்டச் செயலா் அமுதன், மாநில தொழிற்சங்க துணைச் செயலா் ஆதிலிங்கபெருமாள், அகஸ்தீஸ்வரம் ஒன்றியச் செயலா் பரமராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com