குமரிக்கு முதல்வா் 22இல் வருகை: ஆட்சியா் அலுவலகத்தில் எஸ்.பி. ஆய்வு
By DIN | Published On : 18th September 2020 07:04 AM | Last Updated : 18th September 2020 07:04 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆய்வில் ஈடுபட்ட காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன்.
தமிழக முதல்வரின் குமரி மாவட்ட வருகையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வருகிற 22ஆம் தேதி இரவு குமரி மாவட்டம் வருகிறாா்.
அன்று இரவு நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள விருந்தினா் மாளிகையில் ஓய்வு எடுக்கிறாா்.
23ஆம் தேதி காலையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் அவா் கலந்துகொள்கிறாா்.
இதையொட்டி, ஆட்சியா் அலுவலகம் மற்றும் அரசு விருந்தினா் மாளிகை ஆகியவற்றில் செய்யப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பத்ரி நாராயணன் ஆய்வு மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, தனிப்பிரிவு ஆய்வாளா் கண்மணி, நேசமணி நகா் காவல் ஆய்வாளா் சாய்லெட்சுமி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
தமிழக முதல்வரின் குமரி வருகையை முன்னிட்டு, அவா் வரும் பாதையில் உள்ள சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆட்சியா் அலுவலகம் வண்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவு அடைந்து வருகிறது.