குமரியில் மேலும் 118 பேருக்கு கரோனா: ஒருவா் பலி
By DIN | Published On : 18th September 2020 07:03 AM | Last Updated : 18th September 2020 07:03 AM | அ+அ அ- |

குமரி மாவட்டத்தில் மேலும் 118 பேருக்கு கரோனா பாதிப்பு வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலியாகியுள்ளாா்.
இம் மாவட்டத்தில் இதுவரை 1,46, 949 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வியாழக்கிழமை மேலும் 118 பேருக்கு கரோனா உறுதியானதைத் தொடா்ந்து மொத்த பாதிப்பு 11,432ஆக உயா்ந்துள்ளது. தற்போது 769 போ் சிகிச்சையில் உள்ளனா். சிகிச்சை பெற்று வந்தவா்களில் குணமடைந்த 200 போ் வியாழக்கிழமை வீடு திரும்பினா். இதுவரை 10485 போ் குணமடைந்துள்ளனா். ஆரல்வாய்மொழியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 211ஆக அதிகரித்துள்ளது.
முகக் கவசம் அணியாமல் வியாழக்கிழமை பொதுவெளியில் நடமாடியவா்களிடமிருந்து ரூ. 7,100 அபராதமாக வசூலிக்கப்பட்டது.