தவறான சிகிச்சையால் மாணவா் பலியான சம்பவம்: மருத்துவா் கைது
By DIN | Published On : 18th September 2020 07:03 AM | Last Updated : 18th September 2020 07:03 AM | அ+அ அ- |

குமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே தவறான சிகிச்சையால் பள்ளி மாணவா் உயிரிழந்த சம்பவத்தையடுத்து தலைமறைவான தனியாா் மருத்துவமனை மருத்துவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடையாலுமூடு பூமூட்டு விளையைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் மகன் அபினேஷ் (12). அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த இவா், அங்குள்ள தனியாா் ஹோமியோபதி மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்தாா்.
இதையடுத்து வருவாய்த் துறையினரால் அந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவா் லூக்கா மீது கடையாலுமூடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவரை தேடி வந்தனா். இந்நிலையில் கேரள எல்லை அருகே பனச்சமூடு பகுதியில் இருந்த லூக்காவை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.