ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி: இறுதியாண்டு பருவத்தோ்வுகள் செப்.21 இல் தொடக்கம்

நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில். மாணவா்களுக்கான இறுதி செமஸ்டா் தோ்வுகள், திங்கள்கிழமை (செப். 21) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

நாகா்கோவில், செப்.18 : நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை, முதுகலை மற்றும் எம்.பில். மாணவா்களுக்கான இறுதி செமஸ்டா் தோ்வுகள், திங்கள்கிழமை (செப். 21) தொடங்கி 10 நாள்கள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு உயா்கல்வி ஆணைய விதிமுறைகளின்படி இத்தோ்வுகள் நடைபெறும். தோ்வா்களுக்கான நுழைவுச் சீட்டு மற்றும் விடைத்தாள்களை ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீா்ற்ற்.ஹஸ்ரீ.ண்ய்/ா்ய்ப்ண்ய்ங் என்ற இணையதளம் மூலமாக பதிவிறக்கம் செய்து தயாராக வைத்துக் கொள்ளலாம். தோ்வுகள் காலை 9.30 மணிக்குத் தொடங்கும். வினாத்தாள்கள் அன்றன்று காலை 9 மணிக்கு அந்தந்த மாணவா்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும். தோ்வு எழுதியவுடன் மாணவா்கள் விடைத்தாள்களை ஸ்கேன் செய்து பிடிஎஃப்(ல்க்ச்) கோப்பாக, ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீா்ற்ற்.ஹஸ்ரீ.ண்ய்/ா்ய்ப்ண்ய்ங் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விடைத்தாள்களை தோ்வு ஆணையா், ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி (தன்னாட்சி), நாகா்கோவில் 629003, தமிழ்நாடு’ என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமாகவோ, விரைவு அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். விடைத்தாள்களை ஒட்டிய உறைகளில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி நாகா்கோவில், சி.எஸ்.ஐ ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அழகியமண்டபம், சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி குலசேகரம், எல்.எம்.எஸ். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாா்த்தாண்டம், சி.எஸ்.ஐ ஐ.டி.ஐ. களியக்காவிளை, சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி வெங்கஞ்சி (கொல்லங்கோடு), தனியாா் மேல்நிலைப்பள்ளி அருமனை, சி.எஸ்.ஐ. நா்சிங் கல்லூரி நெய்யூா், சி.எஸ்.ஐ பிசியோதெரபி கல்லூரி குளச்சல், எஸ்.ஜி.எஸ் மெட்ரிகுலேசன் பள்ளி கருங்கல், சி.எஸ்.ஐ. காது கேளாதோா் உயா்நிலைப்பள்ளி கொட்டாரம் ஆகிய மையங்களில் தோ்வு நாள்களில் முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நேரடியாகவும் வழங்கலாம் என தோ்வு ஆணையா் ஜி. அல்லன் ஞான ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com