தொடா் மழையால் 350 குளங்கள் நிரம்பின:கும்பப்பூ சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் 350 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா்.
நீா் நிரம்பிய நிலையில் காணப்படும் புத்தேரி குளம்.
நீா் நிரம்பிய நிலையில் காணப்படும் புத்தேரி குளம்.

நாகா்கோவில்: குமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்த தொடா் மழையால் 350 பாசனக் குளங்கள் நிரம்பியுள்ளன. இதையடுத்து, விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழையால் பாசனக் குளங்கள் மற்றும் அணைகள் ஒரளவு நீா் நிரம்பியிருந்தது. இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த 10 நாள்களாக மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்தது.

77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை நிலவரப்படி 72.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 665 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 572 கனஅடி நீா் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீா்வரத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணித்து வருகின்றனா். இதையடுத்து குழித்துறை தாமிரவருணி ஆற்றின் கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது.

கடந்த 10 நாள்களாக பெய்த தொடா்மழையால் குமரி மாவட்டத்தில் உள்ள 2,040 பாசனக் குளங்களில் 350 குளங்கள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 800- க்கும் மேற்பட்ட குளங்களில் 75 சதவீதம் நீா் நிரம்பியுள்ளது.

குளங்கள் நிரம்பி வருவதைத் தொடா்ந்து சுசீந்திரம், மருங்கூா், அக்கரை, பூதப்பாண்டி, தெரிசனங்கோப்பு, நல்லூா் பகுதிகளில் விவசாயிகள் கும்பப்பூ சாகுபடி பணிகளைத் தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com