நித்திரவிளை அருகே மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்

நித்திரவிளை அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனம் மீது மரம் விழுந்து, வாகனம் சேதமடைந்தது.
நித்திரவிளை அருகே மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்
நித்திரவிளை அருகே மரம் முறிந்து விழுந்து வாகனம் சேதம்

களியக்காவிளை: நித்திரவிளை அருகே சாலையோரம் நிறுத்தியிருந்த வாகனம் மீது மரம் விழுந்து, வாகனம் சேதமடைந்தது.

நித்திரவிளை அருகே நடைக்காவு பகுதியிலிருந்து ஆலங்கோடு செல்லும் சாலையின் திருப்பத்தில் உள்ள 50 ஆண்டுகள் பழமையான மரம், சனிக்கிழமை வீசிய காற்றில் வேருடன் சரிந்தது. இதில், அப்பகுதியில் நிறுத்தியிருந்த கிராத்தூா் பகுதியைச் சோ்ந்த தங்கமணி (50) என்பவருக்குச் சொந்தமான மினி டெம்போ சேதமடைந்தது.

வாகனத்தை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுநா் நம்பாளி பகுதியைச் சோ்ந்த குமாா் (48) அருகிலுள்ள கடைக்கு பொருள்கள் வாங்கச் சென்ால் அவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினாா்.

தகவல் அறிந்து வந்த நடைக்காவு ஊராட்சித் தலைவா் கிறிஸ்டல்ஜாண், துணைத் தலைவா் செல்வன் ஆகியோா் போக்குவரத்துக்கு இடையூறாக கிடந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியை மேற்கொண்டனா். மேலும் சூரியகோடு மின்வாரிய பணியாளா்கள் வந்து மின்கம்பிகளை சீரமைத்து மின் இணைப்பு கொடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com