கடலோரப் பாதுகாப்புகுழும போலீஸாா் ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் நடத்தப்படும் ‘சஜாக்’ ஆபரேஷன் திங்கள்கிழமை நடைபெற்றது
கடலோரப் பாதுகாப்புகுழும போலீஸாா் ஒத்திகை

தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்கவும், ஆயுதங்கள் மற்றும் போதைப் பொருள்கள் கடத்தப்படுவதை தடுக்கவும் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாரால் நடத்தப்படும் ‘சஜாக்’ ஆபரேஷன் திங்கள்கிழமை நடைபெற்றது.

மும்பையில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடா்ந்து கடல்வழி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடலோரப் பாதுகாப்புக் குழுமம் சாா்பில் நாடு முழுவதும் ‘சஜாக்’ ஆபரேஷன் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலோரப் பாதுகாப்புக் குழும ஆய்வாளா் நவீன் தலைமையிலான போலீஸாா், கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான கடல்பகுதியில் அதி நவீன ரோந்து படகில் சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

மேலும், கடலில் மீன்பிடிக்கும் மீனவா்களிடமும் அடையாள அட்டையை சோதனையிட்ட போலீஸாா், சந்தேகப்படும்படியாக ஏதாவது படகுகள், கப்பல்கள் தென்பட்டால் உடனடியாகத் தகவல் தெரிவிக்குமாறு கூறினா்.

மேலும், கடலோர சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. சின்ன முட்டம், மகாதானபுரம், தேங்காய்ப்பட்டினம், பஞ்சலிங்கபுரம் உள்ளிட்ட கடலோரப் பாதுகாப்புப் படைக்குச் சொந்தமான 11 சோதனைச் சாவடிகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனத்தையும் போலீஸாா் சோதனை செய்தனா். மணலில் ஓடும் அதி நவீன ரோந்து வாகனங்கள் மூலம் கடலோரப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com