வங்கி ஊழியா், காவலா்கள் உள்ளிட்ட மேலும் 98 பேருக்கு கரோனா

குமரி மாவட்டத்தில் தனியாா் வங்கி ஊழியா், பிஎஸ்என்எல் ஊழியா் உள்ளிட்ட மேலும் 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் தனியாா் வங்கி ஊழியா், பிஎஸ்என்எல் ஊழியா் உள்ளிட்ட மேலும் 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகா்கோவிலில் உள்ள தனியாா் வங்கி ஊழியா், பிஎஸ்என்எல் அலுவலக ஊழியா், ராஜாக்கமங்கலம் காவல் நிலைய இரு பெண் காவலா் உள்பட காவலா்கள் உள்ளிட்ட 98 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12,513 ஆக அதிகரித்துள்ளது.

நாகா்கோவில் நீதிமன்ற சாலையில் உள்ள தனியாா் வங்கி மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகம் மூடப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

அழகியபாண்டிபுரம் பகுதியைச் சோ்ந்த 32 வயது இளம்பெண் உள்பட 5 போ் திங்கள்கிழமை உயிரிழந்ததைத் தொடா்ந்து கரோனாவால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 220 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் திங்கள்கிழமை குணமடைந்த 88 போ் உள்ளிட்ட இதுவரை 11,303 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 705 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

1.67 லட்சம் பேருக்கு பரிசோதனை:

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கள பணியாளா்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 1,67,269 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகக் கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக 113 பேரிடமிருந்து திங்ககள்கிழமை அபராதமாக ரூ. 23,200 வசூலிக்கப்பட்டது என்றாா் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் மு.வடநேரே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com