குமரி மாவட்ட ரேஷன் கடைகளில்பயோமெட்ரிக் முறை அமல்

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யும் முறை திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.
குமரி மாவட்ட ரேஷன் கடைகளில்பயோமெட்ரிக் முறை அமல்

குமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யும் முறை திங்கள்கிழமை அமலுக்கு வந்தது.

ரேஷன் கடைகளில் பொருள்கள் விநியோகத்தை முறைப்படுத்தவும், முறைகேடுகளை தடுக்கவும் விரல்ரேகை பதிவை அரசு கட்டாயமாக்கி உள்ளது.

இதையடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீசுவரம், கல்குளம், திருவட்டாறு, தோவாளை, கிள்ளியூா் மற்றும் விளவங்கோடு ஆகிய வட்டங்களில் உள்ள 750 ரேஷன்கடைகளுக்கும் பயோமெட்ரிக் கருவிகள் வழங்கப்பட்டன.

இதுகுறித்து அகஸ்தீசுவரம் வட்ட வழங்கல் அதிகாரி கூறியதாவது: அகஸ்தீஸ்வரம் வட்டத்திலுள்ள 215 ரேஷன் கடைகளுக்கும் பயோமெட்ரிக் கருவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

இந்த புதிய முறையின்படி குடும்ப அட்டையிலுள்ள குடும்ப உறுப்பினா்களில் யாராவது ஒருவா் ரேஷன் கடைக்கு நேரில் சென்று தங்கள் விரல்ரேகையை பதிவு செய்தால்தான் குடும்ப அட்டைக்கான பொருள்கள் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, பயோமெட்ரிக் கருவியை கையாள்வது குறித்து ரேஷன்கடை ஊழியா்களுக்கு, அதிகாரிகள் பயிற்சி அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com