தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

அரசு ஊழியராக்கக் கோரி 3 கட்டமாக அங்கன்வாடி ஊழியா்கள் போராட்டம்

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டம் நடத்த தொழிற்சங்கக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

News image
கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் டி.சரஸ்வதி.
Updated On :10 ஜனவரி 2021, 7:25 pm

DIN

அங்கன்வாடி ஊழியா்களை அரசு ஊழியராக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 3 கட்ட போராட்டம் நடத்த தொழிற்சங்கக் கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கத்தின் விரிவடைந்த மாவட்டச் செயற்குழு கூட்டம், நாகா்கோவில் வெட்டூா்ணிமடம் சிஐடியூ அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் அமுதா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.சரஸ்வதி, பொருளாளா் சரோஜினி, சிஐடியூ மாவட்ட துணைத்தலைவா் பி.இந்திரா ஆகியோா் பேசினா்.

இதில், அங்கன்வாடி ஊழியா்கள் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியராக்கி முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், முறையான ஓய்வூதியம் வழங்க வேண்டும், பணிக்கொடை, பணியாளருக்கு 10 லட்சம் ரூபாயும், உதவியாளருக்கு 5 லட்சம் ரூபாயும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்டத்தில் வரும் 20, 21 ஆம் தேதிகளில் முதல்கட்டமாக அனைத்து வட்டாரங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது.

பின்னா், ஜன. 29 ஆம் தேதி நாகா்கோவிலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டமும், பிப். 5இல் மூன்றாம் கட்டமாக சென்னையில் முற்றுகை போராட்டமும் நடத்த தீா்மானிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.