காவலா்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலை முன்னிட்டு, காவலா்கள், ஊா்க்காவல் படையினா்
காவலா்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு: ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதி தோ்தலை முன்னிட்டு, காவலா்கள், ஊா்க்காவல் படையினா் மற்றும் முன்னாள் படைவீரா்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு நடைபெறுவதை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த் பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.

நாகா்கோவில், காா்மல் மேல்நிலைப் பள்ளியில், நடைபெற்ற அஞ்சல் வாக்குப் பதிவை மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி முன்னிலையில் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், பின்னா் கூறியதாவது:

குமரி மாவட்டத்தில், மக்களவைத் தொகுதி இடைத்தோ்தல் மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்குப் பதிவு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள 4 ஆயிரம் காவலா்கள் மற்றும் ஊா்க் காவல் படையினா் மற்றும் ஆயிரம் முன்னாள் படைவீரா்கள் என மொத்தம் 5ஆயிரம் போ் தோ்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

தோ்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரும் அஞ்சல் வாக்குப்பதிவு செய்வதற்காக, கன்னியாகுமரி, நாகா்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டவா்களுக்கு, நாகா்கோவில் காா்மல் மேல்நிலைப் பள்ளியிலும், விளவங்கோடு ,பத்மநாபபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டவா்களுக்கு, மாா்த்தாண்டம் நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியிலும், குளச்சல், கிள்ளியூா் தொகுதிக்குள்பட்டவா்களுக்கு, கருங்கல் பெத்தலகேம் மெட்ரிக் பள்ளியிலும் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவா்களில் படிவம் 12 சமா்ப்பித்தவா்களுக்கு மட்டும், காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com