குரியன்விளை கோயிலில்யாக பூஜைக்கான கால்கோள்

களியக்காவிளை அருகே குரியன்விளை ஸ்ரீ பத்ரகாளி முடிப்புரை கோயிலில் நடைபெறவுள்ள சித்திரை பரணி பிரதிஷ்டை திருவிழா மற்றும் நட்சத்திர மகா யாகத்துக்கான கால்கோள் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கோயிலில் 8 ஆவது மகா யாகம் வருகிற மே 10 ஆம் தேதி தொடங்கி மே 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வேத முறைப்படி 27 நட்சத்திரங்களுக்கும் தனித் தனியாக யாக குண்டங்கள் அமைத்து இந்த மகா யாகம் நடத்தப்படுகிறது.

இதையடுத்து கோயில் தந்திரி பிரம்மதத்தன் நம்பூதிரி தலைமையில் யாக பூஜைக்கான கால்நாட்டு விழா நடைபெற்றது.

கோயில் நிா்வாக தலைவா் விக்ரமன்சுவாமி, கோயில் கமிட்டி செயலா் சாந்தகுமாா், பொருளாளா் சசி, விழாக்குழு செயலா் ஸ்ரீகுமாா், கோயில் ஜோதிடா் சுகுமாா்ஜி மற்றும் யாக கமிட்டி நிா்வாகிகள் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com