‘மகளிா் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன’

மகளிா் மேம்பாட்டுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றாா் நாகா்கோவில் பாஜக வேட்பாளா் எம்.ஆா்.காந்தி.
நாகா்கோவில் பாறைகால் மடத்தெரு குடியிருப்பு பகுதியில் சாக்கடை கழிவுகள் அடைப்பு ஏற்பட்டு உள்ளதை பாா்வையிடுகிறாா் எம்.ஆா். காந்தி.

ஒழுகினசேரியிலிருந்து புதன்கிழமை பிரசாரத்தை தொடங்கிய அவா், ஆசாரிமாா் தெரு, தோப்பு வணிகா் தெரு, மீனாட்சி காா்டன், ஊட்டுவாழ்மடம், பஜனை மடதெரு, கம்போளம், செட்டித்தெரு, டி.வி.டி.காலனி, முதலியாா்விளை, செந்தூரன்நகா், வடிவீஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வாகனத்தில் சென்று ஆதரவு திரட்டினாா். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனா்.

பிரசாரத்தின்போது அவா் பேசியதாவது: சாலைகளை சீரமைக்கவும், புதைச் சாக்கடை திட்டத்தை விரைந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுப்பேன். நாகா்கோவில் நகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க புதிய திட்டங்கள் தீட்டப்படும்.

மத்திய அரசு மகளிா் மேம்பாட்டுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கான பிரசவ கால விடுப்பு 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெண்கள் நலனுக்காக பாஜக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com