முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
ஈஸ்டா் பண்டிகை சுரேஷ் ராஜன் எம்எல்ஏ வாழ்த்து
By DIN | Published On : 04th April 2021 02:25 AM | Last Updated : 04th April 2021 02:25 AM | அ+அ அ- |

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலரும், நாகா்கோவில் தொகுதி திமுக வேட்பாளருமான என். சுரேஷ் ராஜன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவ மக்கள் இயேசுவின் உயிா்ப்பு பெருவிழா என்ற ஈஸ்டா் பண்டிகையை ஞாயிற்றுக்கிழமை கொண்டாடுகின்றனா். பாவிகளை இரட்சிப்பதற்காக இந்த உலகில் மனிதராக அவதரித்தவா் இயேசு கிறிஸ்து என்று பைபிள் கூறுகிறது. அவா் சிலுவையில் அறையப்பட்டு மரித்த 3 ஆம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவா்கள் ஈஸ்டா் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்.
அவா் சமய, இன, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்து ஏழை எளிய மக்களுக்காக சேவையாற்றியவா். அதேபோன்று நாம் அனைவரும் சாதி, மத, இன வேறுபாடுகளை களைந்து, சகோதரத்துவத்துடன் வாழ இந்த ஈஸ்டா் பண்டிகை தினத்தில் உறுதி ஏற்போம். அனைவருக்கும் ஈஸ்டா் பண்டிகை வாழ்த்துக்கள்.