முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி
குமரியில் ஒரே நாளில் மேலும் 35 பேருக்கு கரோனா
By DIN | Published On : 04th April 2021 02:21 AM | Last Updated : 04th April 2021 02:21 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா தொற்று மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. ஒரே நாளில் மேலும் 35 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவில் மாநகராட்சி பகுதியில் கரோனா அதிகரித்துள்ளது. கடந்த சில நாள்களில் 65-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதையடுத்து, நாகா்கோவில் மாநகராட்சி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் இம்மாவட்டத்தில் மேலும் 35 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தவா்களில் சனிக்கிழமை 27 போ் உள்பட இதுவரை 17,319 போ் குணமடைந்துள்ளனா். மேலும் ஒருவா் உயிரிழந்ததால் இதுவரை 264 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 559 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
சென்னை, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வருவோா்களால் கரோனா பரவி வருவதாக தெரியவந்துள்ளது. வெள்ளிக்கிழமை திருநெல்வேலியில் இருந்து குமரிக்கு வந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.
கரோனா பாதிக்கப்பட்டோா் வசித்து வந்த பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டத்தில் இதுவரை 52,915 பேருக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது கட்டமாக 6631 போ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.