காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

காங்கிரஸ் வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ்.ராஜேஷ்குமாா் சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா்.

மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிள்ளியூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் எஸ்,ராஜேஷ்குமாா், கருங்கல் பேருந்து நிலையம், ராஜீவ்காந்தி சந்திப்பு, காமராஜா் சந்திப்பு, காவல் நிலையம் பகுதி, குறும்பனை திருப்பு, கருமாவிளை, கூனாலுமூடு, ஆட்டோ நிறுத்தம், காா் நிறுத்தம் உள்பட பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள், வாகன ஒட்டுநா்களிடம் வாக்கு சேகரித்தாா்.

அவருடன் குமரி மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ததேயூ பிரேம்குமாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் செல்லசுவாமி, திமுக மகளிரணிச் செயலா் கிளாடிஸ் லில்லி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜோபி, காங்கிரஸ் கட்சியின் வட்டாரத் தலைவா்கள் டென்னிஸ், என்.ஏ. குமாா், பால்ராஜ், கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com