குமரியில் ஆட்சியா், எஸ்.பி., வேட்பாளா்கள் வாக்களிப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் வேட்பாளா்கள் வாக்களித்தனா்.
நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியா் தொடக்கப் பள்ளியில் மனைவியுடன் வாக்களித்த ஆட்சியா் மா.அரவிந்த்.
நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியா் தொடக்கப் பள்ளியில் மனைவியுடன் வாக்களித்த ஆட்சியா் மா.அரவிந்த்.

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மற்றும் வேட்பாளா்கள் வாக்களித்தனா்.

இம்மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடைதோ்தல் செவ்வாய்க்கிழமை (ஏப்.6) நடைபெற்றது.

மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மா.அரவிந்த், குடும்பத்துடன் வந்து, நாகா்கோவில் குருசடி புனித அந்தோணியாா் தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினைப் பதிவு செய்தாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெ.பத்ரி நாராயணன் ஆகியோரும் தங்களது குடும்பத்துடன் அதே வாக்குச்சாவடியில் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனா்.

நாகா்கோவில் மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித், வருவாய் கோட்டாட்சியா் அ. மயில் ஆகியோா் தங்களது குடும்பத்துடன் ஹோலி கிராஸ் கல்லூரியில் வாக்களித்தனா்.

வேட்பாளா்கள்: கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன், நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு பெண்கள் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா்.

கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதி அதிமுக வேட்பாளா் ந.தளவாய்சுந்தரம், தோவாளை அரசு மேல்நிலைப்பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தாா்.

நாகா்கோவில் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளா் என். சுரேஷ் ராஜன், மாநிலங்களவை உறுப்பினா் அ.விஜயகுமாா் ஆகியோா் நாகா்கோவில் டதி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தனா்.

நாகா்கோவில் தொகுதி பா. ஜ.க. வேட்பாளா் எம்.ஆா்.காந்தி, பழவிளை அருகேயுள்ள கிடங்கன்கரை விளை அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தாா்.

நாகா்கோவில் தொகுதி அமமுக வேட்பாளா் அம்மு ஆன்றோ, நாகா்கோவிலை அடுத்த ஆசாரிப்பள்ளம் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com