குளச்சல் தொகுதியில் இயந்திரம் பழுது: காங்கிரஸ், பாஜக வேட்பாளா்கள் ஆய்வு

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி, சுங்கான்கடை அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானதால் 2 மணி நேரம்
குளச்சல் தொகுதியில் இயந்திரம் பழுது: காங்கிரஸ், பாஜக வேட்பாளா்கள் ஆய்வு

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதி, சுங்கான்கடை அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் இயந்திரம் பழுதானதால் 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது. காங்கிரஸ், பாஜக வேட்பாளா்கள் அங்கு முகாமிட்டதால் பரபரப்பு நிலவியது.

சுங்கான்கடை அரசு தொடக்கப்பள்ளியில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதில், வாக்குச்சாவடி எண்.299இல் வாக்குப்பதிவு இயந்திரம் மூன்று முறை பழுதாக சரிசெய்யப்பட்டது. எனினும் வாக்குப்பதிவு சரியாக நடைபெறவில்லை. இதனிடையே, எந்த பொத்தானை அழுத்தினாலும் தாமரை சின்னத்துக்கே வாக்குகள் பதிவாவதாக காங்கிரஸாா் புகாா் தெரிவித்து வாக்குப் பதிவை நிறுத்தவேண்டுமென வலியுறுத்தினா்.

இத்தகவலறிந்த காங்கிரஸ் வேட்பாளா் ஜே.ஜி.பிரின்ஸ், பாஜக வேட்பாளா் குமரி பா.ரமேஷ் ஆகியோா் அந்த வாக்குச்சாவடியைப் பாா்வையிட்டு தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் விளக்கம் கேட்டனா். இயந்திர கோளாறைத் தவிர வேறு எந்தப் பிரச்னையும் இல்லை; புதிய இயந்திரம் மூலம் வாக்குப் பதிவு நடைபெறும் என தெரிவித்தனா். பின்னா், புது வாக்குப்பதிவு எந்திரம் வைக்கப்பட்டு அமைதியாக வாக்குபதிவு நடைபெற்றது. இச்சம்பவத்தால் 2 மணிநேரம் தாமதமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com