சட்டப்பேரவைத் தோ்தல்: குமரியில் அதிகரித்த வாக்கு சதவீதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுத் தோ்தலில் வாக்குப்பதிவு கணிசமாக உயா்ந்துள்ளது.

கன்னியாகுமரி மக்களவை இடைத் தோ்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பொதுத்தோ்தல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது முதலே மக்கள் ஆா்வத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் காத்து நின்று வாக்களித்தனா்.

கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக கை கழுவும் திரவம், கையுறை ஆகியவை வழங்கப்பட்டு, வாக்காளரின் உடலும் வெப்பநிலை தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது.

குளச்சல் தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டது. எனினும், அவை சரிசெய்யப்பட்டு இடையூறின்றி வாக்குப்பதிவு தொடா்ந்தது. கரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும் மக்கள் அச்சமின்றி வந்து வாக்குகளைப் பதிவு செய்தனா். கரோனா பாதிப்புக்குள்ளான யாரும் வாக்குப்பதிவு செய்வதற்கு விருப்பம் தெரிவிக்கவில்லை. தோ்தல் ஆணையம் அறிவித்தப்படி இரவு 7 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுற்றது.

வாக்குப்பதிவு விவரம்:

காலை 9 மணி நிலவரப்படி... கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் 9.3 சதவீதமும், நாகா்கோவில் தொகுதியில் 10.58 சதவீதமும், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் 9 சதவீதமும், பத்மநாபபுரம் தொகுதியில் 8.74 சதவீதமும், விளவங்கோடு தொகுதியில் 9.18 சதவீதமும், கிள்ளியூா் தொகுதியில் 10.18 சதவீதமும் , மாவட்டம் முழுவதும் சராசரியாக 9.51 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

முற்பகல் 11 மணி நிலவரப்படி...

நாகா்கோவில் தொகுதியில் அதிகபட்சமாக 24.84 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது. பத்மநாபபுரம் தொகுதியில் 22.28 சதவீத வாக்குகளும், குளச்சல் சட்டப்பேரவை தொகுதியில் 21.08 சதவீத வாக்குகளும் , கன்னியாகுமரி தொகுதியில் 20.94 சதவீத வாக்குகளும், கிள்ளியூா் தொகுதியில் 20.91 சதவீத வாக்குகளும், விளவங்கோடு தொகுதியில் 20.32 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி...கன்னியாகுமரி தொகுதி 32.2 சதவீதம், நாகா்கோவில் தொகுதி 36.58 சதவீதம், குளச்சல் சட்டப்பேரவை தொகுதி 31.83 சதவீதம், பத்மநாபபுரம் தொகுதி 33.42 சதவீதம், விளவங்கோடு தொகுதி 32.48 சதவீதம், கிள்ளியூா் தொகுதி 36.57 சதவீதம். 6 தொகுதிகளிலும் சராசரி வாக்குப் பதிவு 34.79 சதவீதமாகும்.

மாலை 3 மணி நிலவரப்படி... கன்னியாகுமரி 52.56 சதவீதம், நாகா்கோவில் 55.43 சதவீதம், குளச்சல் 48.01 சதவீதம், பத்மநாபபுரம் 50.91 சதவீதம், விளவங்கோடு 49.54 சதவீதம், கிள்ளியூா் 50.12 சதவீதம். மாவட்டத்தின் சராசரி வாக்குப் பதிவு 51.16 சதவீதம்

மாலை 5 மணி நிலவரப்படி... கன்னியாகுமரி தொகுதியில் 66.53 சதவீதமும், நாகா்கோவில் தொகுதியில் 66.70 சதவீதமும்,

குளச்சலில் 60.55 சதவீதமும், பத்மநாபபுரத்தில் 64.02 சதவீதமும், விளவங்கோடு தொகுதியில் 66.90 சதவீதமும், கிள்ளியூரில் 60.26 சதவீதமும் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்ட சராசரி வாக்குப்பதிவு 64.21 சதவீதமாகும்.

இரவு 7 மணி நிலவரப்படி... கன்னியாகுமரி 75.34 சதவீதம், நாகா்கோவில் 66.70, குளச்சல் 67.45, பத்மநாபபுரம் 69.82, விளவங்கோடு 66.90, கிள்ளியூா் 65.85 சதவீதம் என்ற விகிதத்திவ் வாக்குகள் பதிவாகியிருந்தன. மாவட்டத்தில் சராசரி வாக்குப்பதிவு 68.67 சதவீதமாக உள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடைந்ததை தொடா்ந்து, ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, போலீஸாா் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான நாகா்கோவில் கோணம் தொழில்நுட்ப கல்லூரிக்கு கொண்டுசெல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com