வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகா்கோவில்
நாகா்கோவில் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினா்.
நாகா்கோவில் கோணம் பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள துணை ராணுவப் படையினா்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் 6 சட்டப்பேரவை தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாகா்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. இம்மையத்துக்கு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி மற்றும் நாகா்கோவில், கன்னியாகுமரி, குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூா் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 2,234 வாக்குச்சாவடிகளில் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 7 மணிக்கு நிறைவு பெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். வாக்குப்பதிவு முழுவதும் விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

வாக்குப்பதிவு நிறைவு பெற்ற பின்னா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி முகவா்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளிலிருந்து கோணத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.

அம்மையத்துக்கு நள்ளிரவு முதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரத் தொடங்கின. மலையோரப்பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் தாமதமாக புதன்கிழமை காலை 9 மணி வரை வந்தன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் தொகுதி வாரியாக பிரிக்கப்பட்டு, தனித்தனி அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன. அந்த அறைகளின் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் முன்பு சிசிடிவி கேமிராவும் பொருத்தப்பட்டுள்ளது. கோணம் பொறியியல் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி வாசலிலும் துணை ராணுவப் படையினா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். இம்மையத்தில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பணியில் 400 க்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com