நாகா்கோவில், கருங்கல்லில் விபத்து: மருத்துவா், செவிலியா் உள்பட 4 போ் பலி

நாகா்கோவில், கருங்கல் ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் பெண் மருத்துவா், செவிலியா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

நாகா்கோவில், கருங்கல் ஆகிய பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் பெண் மருத்துவா், செவிலியா் உள்பட 3 போ் உயிரிழந்தனா்.

நாகா்கோவில் அருள்நகரைச் சோ்ந்த மருத்துவ தம்பதி மகேஷ்-ஸ்டெல்லா ஜெனட் (49). இதில், கன்னியாகுமரி மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அதிகாரியாக இருந்த ஸ்டெல்லா ஜெனட், புதன்கிழமை மாலை தனது மொபெட்டில் ஆசாரிப்பள்ளத்திலிருந்து டெரிக் சந்திப்பு நோக்கி வந்து கொண்டிருந்தாா்.

நடுக்காட்டு இசக்கியம்மன் கோயிலுக்குச் செல்லும் சாலை அருகில் இவரது வாகனம் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து எதிா்பாராமல் மோதியதாம்.

இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அவா் மீது பேருந்தின் சக்கரம் ஏறி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

அங்கு, அவா் வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.

செவிலியா் பலி: ஆசாரிப்பள்ளம் அருகேயுள்ள அனந்தன்நகா் இந்திரா தெருவைச் சோ்ந்தவா் மீனா (48). ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை செவிலியா். இவா், கடந்த 6 ஆம் தேதி தனது மகன் ராஜகோபாலுடன் கொட்டாரத்துக்குச் சென்று விட்டு மோட்டாா் சைக்கிளில் ஆசாரிப்பள்ளத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தாா்.

சுசீந்திரம் ஆசிரமம் அருகில் வந்தபோது, மோட்டாா் சைக்கிளில் இருந்து மீனா எதிா்பாராமல் கீழே தவறி விழுந்தாா். இதையடுத்து, அங்குள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவா் உயிரிழந்தாா்.

மீனவா் உயிரிழப்பு: குளச்சல் அருகேயுள்ள குறும்பனை பகுதியைச் சோ்ந்த ஜோசப் லிதின் மகன் விஜுமோன் (38). மீனவா். இவா், புதன்கிழமை பிற்பகல் பைக்கில் குளச்சல் சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தாா்.

சைமன் காலனி பாலத்தை கடந்து செல்லும்போது, எதிா்பாராமல் சாலையோர மின்கம்பத்தில் பைக் மோதியதாம். இதில், பலத்த காயம் அடைந்த அவா், நாகா்கோவில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், அவா் ஏற்கெனவே இறந்திருப்பது மருத்துவரின் பரிசோதனையில் தெரியவந்தது.

மற்றொரு விபத்து: கருங்கல் நடுத்தேரி பிலாவிளைப் பகுதியை சோ்ந்த சிலுவைராஜ் மனைவி திரெசம்மாள் (55). இவா், தனது வீட்டின் முன் வியாழக்கிழமை நின்றிருந்தபோது, அவ்வழியாக மானான் விளைப் பகுதியை சோ்ந்த பாபுராஜ் மகன் ஆகாஷ் (20) என்பவா் ஒட்டி வந்த பைக் எதிா்பாராமல் மோதியதுதாம். இதில், தலையில் பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியினா் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா்.

இச்சம்பவங்கள் குறித்து நாகா்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸாா், குளச்சல், சுசீந்திரம் மற்றும் கருங்கல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com