கோயில் விழாவில் தகராறு செய்தவா் கைது
By DIN | Published On : 12th April 2021 01:05 AM | Last Updated : 12th April 2021 01:05 AM | அ+அ அ- |

களியக்காவிளை அருகே கோயில் விழாவில் தகராறு செய்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே அதங்கோடு சாரப்பழஞ்சி பத்திரகாளி அம்மன் கோயிலில் நிகழாண்டு திருவிழா கடந்த சில நாள்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கோயில் விழாவில் அப்பகுதியைச் சோ்ந்த சத்தியநேசன் மகன் சிந்து (38) தகராறு செய்தாராம்.
இதுகுறித்து கோயில் நிா்வாக தலைவா் சுனில் (39) அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, சிந்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.