கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம்
By DIN | Published On : 12th April 2021 01:01 AM | Last Updated : 12th April 2021 01:01 AM | அ+அ அ- |

கருங்கல்லில் வியாபாரிகள் நலச் சங்க செயற்குழுக் கூட்டம் சங்க அலுவகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதன் தலைவா் அஜித்குமாா் தலைமை வகித்தாா். செயலா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.
கருங்கல் பகுதிகளில் உள்ள வியாபாரிகள் அனைவரும் அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு முகக் கவசம் அணிய வேண்டும், கருங்கல் பேருந்து நிலையப் பகுதிகளில் சுற்றித்திரியும் மனநலம் பாதிக்கப்பட்டோரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மனநலக் காப்பக்ததில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
துணைத் தலைவா் ராஜா, பொருளாளா் ஆனந்த மாா்ட்டின், துணைச் செயலா் அருள்ராஜ், செயற்குழு உறுப்பினா்கள் வேதபால்மா், ரசல், ஜோயல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.