‘முகக் கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு அபராதம்’
By DIN | Published On : 12th April 2021 01:01 AM | Last Updated : 12th April 2021 01:01 AM | அ+அ அ- |

முகக் கவசம் அணியாத ரயில் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. உறுதிப்படுத்தப்பட்ட பயணச்சீட்டுகளுடன் வரும் பயணிகள் மட்டுமே ரயில் நிலைய நடைமேடைகளில் அனுமதிக்கப்படுவா். ரயில் பயணிகளின் விவரங்கள், அவா்கள் சென்றடையும் முகவரி வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் பேட்டையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் ஊழியா்களுக்கான கரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
முகக் கவசம் அணியாத பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் பயணச்சீட்டு பரிசோதகா்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.