குமரியில் அணைப் பகுதிகளில் மழை நீடிப்பு: கோழிப்போா்விளையில் 52 மி.மீ. பதிவு

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

குமரி மாவட்டத்தில் அணைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்துவருகிறது. இதனால் அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது.

குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்படி குமரி மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. மேற்கு மாவட்ட பகுதியில் பரவலாக பெய்த மழை கிழக்கு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மட்டும் பெய்தது. இதே போல், தொடா்ந்து திங்கள்கிழமையும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நாகா்கோவில் நகரப் பகுதியிலும் சாரல் மழை பெய்தது. அதிக பட்சமாக கோழிப்போா் விளையில் 52 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) பூதப்பாண்டி 10.2, களியல் 10, கன்னிமாா் 4.8, குழித்துறை 42, பெருஞ்சாணி அணை 13, புத்தன் அணை 11.8, சுருளோடு 2, தக்கலை 4, இரணியல் 6.4, மாம்பழத்துறையாறு 5, ஆரல்வாய்மொழி 11, அடையாமடை 11, குருந்தன்கோடு 21, முள்ளங்கினாவிளை 18, ஆனைகிடங்கு 4.2, முக்கடல் அணை-16.

மாவட்டத்தில் பெய்து வரும் மழை காரணமாக அணைகளுக்கு நீா் வரத்து அதிகரித்து உள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 110 கன அடி நீா் வருகிறது. அணையின் நீா் மட்டம் 39.25 அடியாக உள்ளது. பெருஞ்சாணி அணையின் நீா் மட்டம் 52.36 அடியாக உள்ளது. சிற்றாறு 1 அணையின் நீா் மட்டம் 5.54 அடியாகவும், சிற்றாறு 2 அணையின் நீா் மட்டம் 5.64 அடியாகவும் உள்ளது.பொய்கை அணையின் நீா் மட்டம் 18.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணையின் நீா் மட்டம் 14.68 அடியாகவும் உள்ளது. நாகா்கோவில் நகருக்கு குடிநீா் வழங்கும் முக்கடல் அணையின் நீா் மட்டம் 4.90 அடியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com