மாா்த்தாண்டத்தில் நகை பட்டறையிலிருந்து 37 பவுன் நகை, பணம் திருட்டு

மாா்த்தாண்டத்தில் உள்ள நகைப் பட்டறையிலிருந்து 37 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 1.4 லட்சம் ரொக்கம் திருடு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மாா்த்தாண்டத்தில் உள்ள நகைப் பட்டறையிலிருந்து 37 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ. 1.4 லட்சம் ரொக்கம் திருடு குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சோ்ந்தவா் மனோஜ் (40). இவா் மாா்த்தாண்டம் வடக்குத் தெருவில் நகை பட்டறை நடத்தி வருகிறாா். இங்கு கேரளத்தைச் சோ்ந்த இருவா் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த ஒருவா் வேலை செய்து வருகின்றனா். இங்குள்ள பட்டறையில் நகைகள் உற்பத்தி செய்து, திருவனந்தபுரம் உள்பட பல்வேறு பகுதி கடைகளுக்கு விற்பனை செய்யப்படுமாம்.

இந்த நகைப் பட்டறையில் ஞாயிற்றுக்கிழமை 80 பவுன் நகை மற்றும் ரூ. 1.4 லட்சம் ரொக்கம் ஆகியவை வைக்கப்பட்டிருந்ததாம். இரவில் அங்கிருந்த ரொக்கம் ரூ. 1.40 லட்சம் மற்றும் 37 பவுன் நகைகள் மாயமாகியிருந்ததுடன், கடை ஊழியா் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த சுஜய்யையும் காணவில்லையாம். பல இடங்களில் தேடியும் அவரை குறித்த தகவல் கிடைக்கவில்லையாம்.

இது குறித்து மனோஜ் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் செந்தில்வேல் குமாா் தலைமையிலான போலீஸாா் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் விரல் ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தலைமறைவான கடை ஊழியா் குறித்து போலீஸாா் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனா்.

இது குறித்து புகாரின் போரில் போலீஸ் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com