குமரி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 124 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மேலும் 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் வசித்த தெருவில் பிளீச்சிங் பவுடா் தூவி சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் மாநகராட்சி சுகாதாரப்பணியாளா்.
நாகா்கோவில் வல்லன்குமாரன்விளை பகுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் வசித்த தெருவில் பிளீச்சிங் பவுடா் தூவி சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளும் மாநகராட்சி சுகாதாரப்பணியாளா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் மேலும் 124 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில், சட்டப்பேரவை தோ்தலுக்கு பிறகு கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 3 வாரங்களாக கரோனா பாதித்தோா் எண்ணிக்கை தினமும் 2 இலக்க எண்ணிக்கையில் இருந்து வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 3 இலக்க எண்ணிக்கையை கடந்துள்ளது. செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 124 ஆனது. இதைத் தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,266 ஆகஅதிகரித்துள்ளது. பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 52 குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,447 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 553 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும் ஒருவா் உயிரிழந்ததால் கரோனா பலி எண்ணிக்கை 267 ஆகியுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வல்லங்குமாரன்விளை பகுதியில் ஒரே தெருவில் 5 குடும்பங்களைச் சோ்ந்த 8 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, நகா்நல அலுவலா் கின்சால், சுகாதார ஆய்வாளா் மாதவன்பிள்ளை ஆகியோா் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனா். மேலும் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அவா்களது குடும்பத்தினா் மற்றும் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைக்கப்பட்டு அடைக்கப்பட்டது.

செட்டிகுளம் சந்திப்பில் உள்ள ஒரு திரையரங்கம் அரசின் கரோனா விதிமுைளை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாநகராட்சிக்கு வந்த புகாரையடுத்து, ஆணையா் ஆஷா அஜித் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலா், சுகாதார ஆய்வாளா்கள் பகவதி பெருமாள், மாதவன் பிள்ளை, ஜான் ஆகியோா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு, திரையரங்கத்துக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

நாகா்கோவில் கோட்டாறு சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து வெளியூா் செல்லும் பயணிகள் அனைவரும் தொ்மல் ஸ்கேனா் மூலம் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.

நாகா்கோவில் நகரில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அரசு விதித்துள்ள கரோனா கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com