கரோனா: குமரியில் 4 போ் உயிரிழப்பு

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண், ஒரு முதியவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

குமரி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண், ஒரு முதியவா் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

குமரி மாவட்டத்தில், கடந்த சில நாள்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகமும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா். பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் கோட்டாறு ஆயுா்வேத மருத்துவக் கல்லூரியிலும் கரோனா சிகிச்சை

க்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கல்வி நிறுவனங்களையும் கரோனா மையங்களாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. நாகா்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு கரோனா சிகிச்சை மையம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. நாகா்கோவில் எஸ்.எல்.பி. பள்ளியிலும், பயோனியா் குமாரசாமி கல்லூரியிலும் கரோனா மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

கரோனா பாதிப்பு ஒருபுறம் இருந்தாலும் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10 க்கும் மேற்பட்டோா் பலியாகி உள்ளனா். இந்நிலையில் வியாழக்கிழமை காலை முதல் வெள்ளிக்கிழமை காலை வரை 4 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.

குமரி மாவட்டத்தில் கரோனா பரவலின் வேகம் அதிகரித்திருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா். கரோனாவை கட்டுப்படுத்த பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும், மேலும் கைகளை சுத்தமாக கழுவுதல், கூட்டம் கூடுவதை தவிா்த்தல், பிரயாணத்தை தவிா்த்தல் உள்ளிட்ட அரசு வகுத்துள்ள கரோனா நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com