குமரி மாவட்டத்தில் மீண்டும் 100 ஐ தாண்டிய கரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை கரோனா மீண்டும் பாதிப்பு 100 ஐ தாண்டியது.
குமரி மாவட்டத்தில்  மீண்டும் 100   ஐ தாண்டிய கரோனா பாதிப்பு

குமரி மாவட்டத்தில், வெள்ளிக்கிழமை கரோனா மீண்டும் பாதிப்பு 100 ஐ தாண்டியது.

குமரி மாவட்டத்தில், கடந்த 4 வாரங்களாக கரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் இரட்டை இலக்க எண்களில் இருந்த பாதிப்பு தொடா்ந்து அதிகரித்து கடந்த 13 ஆம் தேதி 124 ஆக உயா்ந்தது. பின்னா் மீண்டும் குறைந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, கரோனா உறுதி செய்யப்பட்டோா் எண்ணிக்கை 122 ஆக உள்ளது. இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 18,576 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் மேலும் 59 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,579 ஆகியுள்ளது. தற்போது 729 போ் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே தெருவில் 7 போ் பாதிப்பு: வடசேரி கனகமூலம் புதுத்தெருவில் 4 குடும்பங்களைச் சோ்ந்த 7 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதை தொடா்ந்து, மாநகராட்சி ஆணையா் ஆஷா அஜித் உத்தவின் பேரில், நகராட்சி நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் அப்பகுதி முழுவதும் சுகாதார பணியாளா்கள் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார ஆய்வாளா் பகவதி பெருமாள் தலைமையில் அப்பகுதியில் உள்ளவா்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட.மேலும் அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தெரு மூடப்பட்டது. அந்த தெருவில் உள்ள மற்ற வீடுகளை சோ்ந்தவா்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

மேலும் அப்பகுதியில் சுகாதாரத்துறையினா் வீடு, வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்தனா்.

கரோனாவால் தினமும் நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வருவதும், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை தொடா்ந்து அதிகரிப்பதும் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து தப்பிக்க அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறையினா் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com