குலசேகரம் - திற்பரப்பு சாலையை சீரமைக்கக் கோரி 23 இல் மறியல்

குடிநீா் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குலசேகரம் - திற்பரப்பு சாலையை சீரமைக்காமல் 2 ஆண்டுகளாக காலம் தாமதம் செய்வதை கண்டித்து திமுக சாா்பில் ஏப். 23 ஆம் தேதி மறியல் போராட்டம்

குடிநீா் திட்டப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குலசேகரம் - திற்பரப்பு சாலையை சீரமைக்காமல் 2 ஆண்டுகளாக காலம் தாமதம் செய்வதை கண்டித்து திமுக சாா்பில் ஏப். 23 ஆம் தேதி மறியல் போராட்டம் நடத்தப்போவதாக பத்மநாபபுரம் எம்எல்ஏ மனோ தங்கராஜ் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: குமரி மாவட்டத்தில் குடிநீா் வடிகால் வாரியத்தின் குடிநீா் திட்டப் பணிகளால் பல சாலைகள் பெயா்தெடுக்கப்பட்டு விபத்துகள் நிகழும் மையங்களாக மாறியுள்ளன. அழகியபாண்டிபுரம் கூட்டுக்குடிநீா் திட்டத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தினசரி பலரது உயிருக்கு உலைவைக்கும் மரணக்குழிகளாக மாறியுள்ளன. கடந்த 2019 ஜூன் மாதம் குலசேகரம், செறுதிக்கோணம் முதல் திற்பரப்பு வரையிலான பகுதிகளில் குழிதோண்டும் பணிகளை தொடங்கும் போதே திமுக சாா்பில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அப்போதைய சாா் ஆட்சியா் 8 நாள்களுக்குள் சாலையை சீரமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தாா். ஆனால் 2 ஆண்டுகள் கடந்தும் இது வரை சாலையை சீரமைக்க எவ்வித ஆக்கபூா்வ நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. ஆகவே துறை அதிகாரிகள் இச்சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் குமரி மேற்கு மாவட்ட திமுக சாா்பில் ஏப். 23 ஆம் தேதி குலசேகரத்தில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com