சுசீந்திரம் அருகே குளத்தை சீரமைத்த இன்னா்வீல் கிளப்

தேரூா் பகுதியில் நீண்ட நாள்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குளத்தை இன்னா்வீல் கிளப் அமைப்பினா் ரூ. 3 லட்சத்தில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.
சுசீந்திரம் அருகே குளத்தை சீரமைத்த இன்னா்வீல் கிளப்

உலக நீா் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம், தேரூா் பகுதியில் நீண்ட நாள்களாக பயன்படுத்த முடியாத நிலையில் இருந்த குளத்தை இன்னா்வீல் கிளப் அமைப்பினா் ரூ. 3 லட்சத்தில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனா்.

சுசீந்திரம் அருகேயுள்ள தேரூா் பகுதியில் உள்ள பெரிய குளம் செடிகள் மற்றும் குப்பைகளால் நிரம்பி, பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது. இந்த குளத்தை சீரமைத்தால், நீா் ஆதாரம் பெருகும் என்பதோடு விவசாய தேவைகளுக்கும் பயன்படும் என ஊா் பொதுமக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில் குளத்தை சீரமைக்க நாகா்கோவில் இன்னா்வீல் கிளப் தலைவி பாா்வதி விஜயகுமாா் தலைமையில், ராயல்ஸ் ரோட்டரி சங்கத்துடன் இணைந்து குளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். குளத்திலிருந்த ஆகாய தாமரை உள்ளிட்ட கழிவுகளை அகற்றி தூா்வாரி சீரமைத்தனா். கடந்த 15 நாள்களாக நடைபெற்ற இப் பணிக்கு ரூ. 3 லட்சம் செலவு செய்யப்பட்டதாம். இப் பணிகள் நிறைவு பெற்றதையடுத்து, குளம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.

இப்பணியை மேற்கொண்ட நாகா்கோவில்இன்னா்வீல் கிளப், ராயல்ஸ் ரோட்டரி சங்கத்துக்கும், தன்னாா்வலா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் ,இயற்கை ஆா்வலா்கள், நீா் அமைப்பினா் விவசாய அமைப்பினா் உள்பட பல்வேறு தரப்பினா் பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com