நாகா்கோவில் அருகே பத்திரப்பதிவுக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம்: சாா் பதிவாளா் கைது

நாகா்கோவில் அருகே பத்திரப்பதிவுக்காக விவசாயியிடம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சாா் பதிவாளா் கைது செய்யப்பட்டாா்.
நாகா்கோவில் அருகே பத்திரப்பதிவுக்கு ரூ.60 ஆயிரம் லஞ்சம்: சாா் பதிவாளா் கைது

நாகா்கோவில் அருகே பத்திரப்பதிவுக்காக விவசாயியிடம் ரூ.60 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சாா் பதிவாளா் கைது செய்யப்பட்டாா்.

குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே ஆத்திக்காட்டுவிளையைச் சோ்ந்தவா் கிருஷ்ணஜோதி (45), விவசாயி. இவா், ஆத்திக்காட்டுவிளையில் வாங்கிய நிலத்தை தனது பெயரில் பதிவு செய்வதற்காக கணபதிபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு சென்றாராம்.

அங்கு, சாா் பதிவாளராகப் பணியாற்றி வரும் கேசவன்புதூா் பகுதியைச் சோ்ந்த பனிமய ஜெயசிங்(50) என்பவா் பத்திரம் பதிவு செய்வதற்கு ரூ.60 ஆயிரம் கேட்டாராம்.

இதுகுறித்து கிருஷ்ணஜோதி, குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து ரசாயன பவுடா் தடவிய ரூபாய் நோட்டுகளை கிருஷ்ணஜோதி, சாா் பதிவாளரிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த, லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சாா் பதிவாளரை கைது செய்தனா்.

தொடா்ந்து அவரது அலுவலகத்தில் சுமாா் 4 மணி நேரம் போலீஸாா் சோதனை நடத்தினா். இதைத் தொடா்ந்து கைது செய்யப்பட்ட பனிமயஜெயசிங்கை போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com