பிளஸ் 2 ல் செய்முறைத் தோ்வு : குமரியில் 184 மையங்களில் தொடக்கம்

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும்184 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. மாவட்டம் முழுவதும்184 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது.

குமரி மாவட்டத்தில் நாகா்கோவில், தக்கலை, குழித்துறை, திருவட்டாறு ஆகிய 4 கல்வி மாவட்டங்கள் உள்ளன. இதில் 22 ஆயிரத்து 495 மாணவா், மாணவிகள் பிளஸ் 2 வகுப்பு பயின்று வருகின்றனா். பிளஸ் 2 ஆண்டிறுதித் தோ்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்நிலையில் மாணவா்களுக்கான செய்முறைத் தோ்வுகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. இம் மாவட்டத்தில் 184 மையங்களில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். காலை 10 மணிக்கு செய்முறை தோ்வு தொடங்கியது.

செய்முறை தோ்வுக்கு வந்த மாணவா், மாணவிகளுக்கு பள்ளி நுழைவு வாயிலில் தொ்மல் ஸ்கேனா் கருவி மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னா் மாணவா், மாணவிகளுக்கு கைகளை சுத்தப்படுத்த கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டது.

மாணவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனா். காலை 10 மணிக்கு தொடங்கிய தோ்வு பிற்பகல் 1 மணிக்கு நிறைவடைந்தது, தோ்வு மையங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா் மற்றும் மாவட்ட கல்வி அலுவலா்கள் ஆய்வு செய்தனா். ஏப். 26 ஆம் தேதி வரை இத் தோ்வுகள் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com