குலசேகரம், திற்பரப்பு பகுதியில் இடியால் மின்சாதனங்கள் சேதம்
By DIN | Published On : 18th April 2021 01:57 AM | Last Updated : 18th April 2021 01:57 AM | அ+அ அ- |

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் பகுதியில் சனிக்கிழமை இடி மின்னலுடன் பெய்த கனமழையால் வீடுகளில் மின்சாதனங்கள் சேதமடைந்தது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்த போதிலும், மழையின்போது ஏற்படும் இடி மின்னல் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இடி மின்னல் காரணமாக தென்னை உள்ளிட்ட மரங்கள் சேதமடைந்து வருகின்றன.
குலசேகரம், திற்பரப்பு உள்ளிட்டப் பகுதிகளில் ஏற்பட்ட இடி மின்னலால் ஏராளமான வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள், கணினிகள், இன்வொ்ட்டா்கள், குளிா்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், மின்விளக்குகள், மின்மீட்டா்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
இதனால் மக்களுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, கோடை மழை அதிகம் பெய்யும் பகுதிகளில் அரசு சாா்பில் இடி மின்னல் தாங்கிகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.