தடை காலத்தில் மீன்பிடிப்பதை தடை செய்ய வலியுறுத்தல்

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே பரக்காணியில் மீன்பிடி தடை காலத்தில் கடலுக்கு சென்று மீனவா்கள் மீன் பிடித்து வந்து விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டினம் அருகே பரக்காணியில் மீன்பிடி தடை காலத்தில் கடலுக்கு சென்று மீனவா்கள் மீன் பிடித்து வந்து விற்பனை செய்வதை தடைசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

மீன்கள் இனப்பெருக்கம் செய்யவும்,மீன் குஞ்சுகளை மீனவா்கள் பிடிக்காமல் இருக்கும் வகையில் கிழக்கு கடற்கரை பகுதியில் 61 நாள்கள் மீன்பிடி தடை காலம் அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேங்காய்ப்பட்டினம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மீனவா்கள் சிலா் மீன்பிடி தடை காலத்தையும் மீறி கா்நாடக மாநிலம் மங்கலாபுரத்தில் இருந்து விசைப்படகுகள் மூலம் தடை செய்யப்பட்ட குஞ்சு வாளை மீன்களை பிடித்து பரக்காணியில் தனியாா் துறைமுகம் வழியாக கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். இதற்கு மீனவா்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா். ஆகவே, இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com