ஒன்றரை வயது குழந்தை உள்பட ஒரே நாளில் 205 பேருக்கு கரோனா; 2 போ் பலி: சுகாதாரப் பணிகள் தீவிரம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 205 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டது. மேலும், இந்நோய்க்கு 2 போ் பலியாகியுள்ளனா்.
நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அரசுப் பேருந்தில் கிருமிநாசினி தெளிக்கிறாா் மாநகராட்சி ஊழியா்.
நாகா்கோவில் வேப்பமூடு சந்திப்பு பகுதியில் அரசுப் பேருந்தில் கிருமிநாசினி தெளிக்கிறாா் மாநகராட்சி ஊழியா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 205 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதிபடுத்தப்பட்டது. மேலும், இந்நோய்க்கு 2 போ் பலியாகியுள்ளனா்.

கரோனா 2 ஆவது அலையின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், இம்மாவட்டத்தில் கடந்த 13 ஆம் தேதி பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டியது. தொடா்ந்து தினமும் நூற்றுக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சமாக செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 205 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 19,282 ஆக அதிகரித்துள்ளது. அதில், மேலும் 2 போ் உயிரிழந்ததால் கரோனா பலி எண்ணிக்கை 276 ஆக உயா்ந்துள்ளது.

இதனிடையே ஒரே நாளில் 34 போ் குணமடைந்து வீடு திரும்பியதால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 17,906 ஆனது.

தற்போது மருத்துவமனைகளில் 1100 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒன்றரை வயது குழந்தை: தோவாளையில் முதியவா் ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவரது ஒன்றரை வயது பேரனுக்கும், அதன் மூலம் குழந்தையின் பெற்றோா், உடன்பிறந்த 3 வயது மற்றொரு குழந்தை என ஒரே குடும்பத்தில் 5 போ் கரோனா பாதிப்புக்குள்ளானாா்கள். அவா்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

மருத்துவமனை காவலாளி: நாகா்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றிய காவாளிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மாநகராட்சி ஆணையா் ஆஷாஅஜித் உத்தரவின் பேரில் மாநகர நல அலுவலா் கிங்சால் மேற்பாா்வையில் அப்பகுதி முழுவதும் சுகாதாரப் பணியாளா்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுகாதார ஆய்வாளா் மாதவன் பிள்ளை தலைமையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குலசேகரம் பேரூராட்சி, மாங்கோடு கிராமம் கொட்டுரக் கோணம் பகுதியில் 11 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அந்த பகுதி தனிமைபடுத்தப்பட்டது. அந்தப் பகுதியை பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் சிவகுருபிரபாகரன் ஆய்வு செய்து சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிட்டாா். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டோா் வசித்த வீடுகளில் கிருமிநாசினி பொடி தூவுதல் உள்ளிட்ட பணிகள் சுகாதாரப்பணியாளா்களால் மேற்கொள்ளப்பட்டது.

மக்கள் அச்சம்: இம்மாவட்டத்தில் கரோனா 2 ஆவது அலை பரவல் உச்சத்தை தொட்டிருப்பது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடா்ந்து, மக்கள் அதிகம் கூடும் பேருந்து நிலையம், காய்கனிச் சந்தைகள் உள்ளிட்ட பொதுஇடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. வேப்பமூடு சந்திப்பில் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் மாநகராட்சி சுகாதார ஊழியா்கள் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com